மாமரத்து ஊஞ்சலில்
அந்த நிலா! பாருங்கள் தமிழ் நிலத்தில் நிலவுகள் கூட ஊஞ்சல் ஆடுகிறது. அவள் கையில் ஒரு
சின்னஞ்சிறிய புத்தகம். ஏதோ படிக்கிறாள், தலையசைக்கிறாள் முணுமுணுக்கிறாள். அவள் அசைவுக்கு
ஏற்ப கூந்தல் அங்கும் இங்கும் ஆடி தாளம்
போட்டுக்கொண்டிருக்கிறது. இயற்கையிலேயே அவள்
கூந்தலில் இசை இருக்கிறதா என யாராவது பட்டிமன்றம் வைக்காமல் இருக்கட்டும். அணில்களும்
கிளிகளும் வந்த வேலையை மறந்து அவள் பாட்டுக்கு பக்கவாத்தியம் வாசிக்கின்றன.
![]() |
Pic Internet |
![]() |
Pic Internet |
X X X
அது தொண்ணூறுகளின்
அழகிய நாட்கள்! இரவுச்செய்திக்காக எதாச்சும் ஒரு வீட்டில் கொஞ்ச சனம் கூடும். அந்த
வீட்டைப்போலவே பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் ரேடியோ இருக்கும். இருந்தாலும் ஒண்ணா
மண்ணா இருந்து செய்தி கேட்பது அத்தனை சுகம்! அதைவிட, நியூசை கேட்டபின் நாலு வரி டிசுக்கசு
பண்ணினாத்தானே நித்தா வரும்! அந்த அரட்டைகள் எல்லாம் ஹாவர்டு யூனிவர்சிற்றி ஆராட்சிகளுக்கு
ஒப்பானவை! மின்சாரம் இல்லாத அந்த நாட்களின் டைனமோ கதைகள் ஒவ்வொருவர் மனத்திலும் இன்னும்
தேயாமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. சைக்கிள் டைனமோவின் துணையில் வானொலிகள்
உயிர்பெற்று
ஓய்ந்துபோகும் அந்த சில மணித்துளிகளுக்கு அவ்வளவு பெறுமதி! இதோ, அந்த ரேடியோவில் போடப்படும்
கேசட் தான் அடுத்த ஆச்சரியம். அவ்வப்போது வரும் அந்த காந்த நாடா கேசட்டுக்களில் எப்படி
குரல் பதியப்படுகிறது என்பதுதான் ஆச்சரியத்தின் காரணம்.
![]() |
Pic Internet |
வாத்தியாரும் பலமுறை
குரல் பதியப்படும் விதம் பற்றி சொல்லித்தந்தார். இருந்தாலும் புரியவே இல்லை…. இன்றுவரை!
ஒவ்வொரு கேசட்டையும் பாதுகாத்து, வேண்டிய பாடலை கேட்க அடிக்கடி ரீவைண்ட் பண்ணி, எந்தப்பக்கத்தில்
எந்தப்பாடல் என தேடித்திரிந்து.... அதை ரகசிய அவஸ்த்தை எனவும் சொல்லலாம். இப்பெல்லாம்
காணாமல் போனோர் பட்டியலில் அந்த கேசட்டுகள் சேர்ந்து விட்டன.
அந்த கேசட்டை பிரித்து,
நாடாக்களை கண்ட இடமெல்லாம் சுத்தி, பட்டத்துக்கு விண் கட்டி, அக்காக்களை அளவிட்ட வாலுகளும்,
சிக்குப்பட்ட கேசட்டை பேனையை விட்டு சுத்தி சரிப்பண்ணி கொடுத்த
நதியன்களும் தங்கள்
பால்யம் அன்னியமாகிப்போனதில் எப்போதாவது அந்த நாள் பாட்டுகளை கேட்ட்கும்போது ஏதோ ஒரு மூலையில் இதயம் தங்களோடு பேசுவதாக உணர்கிறார்கள்.
![]() |
கேளடி கண்மணி... பாடகன் சங்கதி Pic Internet |
அந்த காலங்களை
நினைவுபடுத்த ஒரு பாட்டு சொல்கிறேன்…..'தென்மதுரை வைகைநதி, தினம் பாடும் தமிழ் பாட்டு...தேய்கின்றது…'
அட இன்னும் ஒன்னு 'வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே'. என்ன அவசரம்? கண்களை மூடி
ஒரு நிமிடம் ஏதாவது ஒரு பாடலை ஓடவிடுங்களேன்! ஆனால் எண்பதுகளின் கடைசிக்கால குலதெய்வம்
இந்த பாடல்களில் நடிக்கவில்லை! கோயில் கட்டப்படாத அந்த கடவுளியின் அழகுகூட ஆச்சரியம்தான்!
அந்த கடவுளி யாராக இருக்கும்? சிலைட்டு முதல் சப்பாத்துவரை பெயரெடுத்து, ஆண்களையும்
பெண்களையும் அலையவிட்ட நதியாதான் அந்த கடவுளி! மன்னிக்கவும்.... நம்ம நதியாதான்!
X X X
அந்தகால குமரிகளிடம்தான்
இந்த கேசட்டுகள் அதிகமாக இருந்தன. அவர்கள்
அத்தோடு சேர்த்து அச்சடிக்கப்பட்ட பாட்டு புத்தகங்களோ அல்லது தாங்களாகவே கேட்டு கைப்பட
மிக துப்பரவாக எழுதிய நோட்டுகளோ வைத்திருந்தார்கள். இந்த நோட்டுகளினுள்ளும் அந்த பாட்டு
புத்தகங்களினுள்ளும் பல ராணுவ ரகசியங்களும் இருக்கும்! இன் அதர்
![]() |
பூத்தொடுக்கும் போதங்கு யாரை நினைத்தனையோ (Pic Internet) |
இதோ இப்போது உஞ்சலாடும்
நிலவுக்கு - அது கையில் வைத்திருக்கும் கேசட்டில்
கடைசிப்பாட்டுக்கு அப்புறம் ஒரு செய்தி இருப்பது தெரியாது. அய்யய்யோ அந்த கேசட்டு டேப்
ரெக்கார்டரில் சிக்கி விட்டதே! நிலா பாவம்! அங்கும் இங்கும் பார்க்கிறது. யாராவது உதவி
செய்யுங்களேன்! அதோ பாருங்கள் உடனேயே வருகிறது ஒரு நதியன்களின் கூட்டம்! அதாங்க நதியா காலத்து நாயகர்கள்! சிக்கெடுத்து, அந்த
செய்தியையும் அவர்கள் சொல்லட்டும்.