Sunday, December 22, 2013

ஆச்சரியத்துப்பால் - 00!

ஆச்சரியங்களின் அணிவகுப்புத்தான் இந்த உலகம். எப்போதும்போல் அது பல விடையில்லா வினாக்களுடன் சுற்றிக்கொண்டிருக்கிறது. அதில், நம் ஒவ்வொருவருக்குமே தெரியாத விடயங்களென ஒரு மிக நீண்ட பட்டியல் இருக்கிறது. அது இருப்பதே தெரியாமல்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இயற்கையின் விளங்க முடியாத அமைப்புகளைத் தாண்டி, செயற்கையாக மனிதன் செய்தவற்றை கூட புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதுதான் இன்னும் ஆச்சரியம்.

என்னது ஏழு அதிசயங்கள்தானா? ஆயின் இங்கே கொட்டிக்கிடக்கும் மிச்சமெல்லாம் என்ன? நான் காணும் அந்த ஆச்சரியங்கள் உலக அதிசயங்கள் பட்டியலில் இல்லை. இல்லவே இல்லை! அவை இதோ எம்மோடு தினமும் பயணித்துக்கொண்டிருக்கின்றன! இங்கே நான் சொல்லவருவது எம்மில் பலருக்கு அதிசயங்களே அல்ல என்பதுதான் வேதனையான உண்மை! வாழ்க்கையில் ஒவ்வொரு பருவமும் சில மைல்கற்களை நாமறியாமலே நட்டுவிட்டுச் சென்றுவிடுகிறது. ஏதோ ஒருநாள் ஏதோ ஒரு காரணத்துக்காக திரும்பிப் பார்க்கும்போது அந்த மைல்கற்கள் பசுமையான நினைவுகளின் தூபிகளாக தெரிகின்றன.


இப்போது திரும்பிப்பார்க்கிறேன். பள்ளிப்பருவத்தில் என்னை ஆச்சரியப்படுத்திய விடயங்கள், புரியமுடியா நினைவுகள் இன்னும் ஒரு ஊர்வலமாக நிற்கின்றன. காலத்துக்கு காலம் அவை வேறு வேறு விடைகளையும் விளக்கங்களையும் சந்தித்தாலும், இன்னும் அவை 
வினாக்குறிகளோடு உயிரோடு இருப்பதே ஆச்சரியம்தான்! 

அந்த சந்தேகங்கள் - சந்தோஷங்களில் ஒரு சில துளிகள்.... அதன் அந்தநேர பின்னணியுடன்; ஆச்சரியத்துப்பால்!

(அடுத்து... ஆச்சரியத்துப்பால் 01 - நுதல் தரும் கவிதை.)

2 comments:

  1. இணைந்து விட்டேன் நண்பரே.. தொடர்கிறேன்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete